புதுக்குடியிருப்பில் 14 வயதுப் பாடசாலை மாணவியை வைத்து பாலியல் தொழில்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மூன்று மாதங்களாக அழைத்து வீட்டில் வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பின்னர் இந்தச் சிறுமி கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலை பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை செய்தபோது இந்தச் சிறுமிக்கும் கிளிநொச்சியில் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த பெண் மூலமாக புதுக்குடியிருப்பு பெண்ணுக்கும் சிறுமிக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு சிறுமிக்கு பண ஆசையினை காட்டி சிறுமி புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பெண் வீட்டிற்கு அழைக்கப்பட்டு மூன்று மாதங்கள் இந்தச் சிறுமி தங்கியிருந்துள்ளார்.
அந்தப் பெண், சிறுமியை வைத்து தொழில் செய்து பணத்தை சிறுமிக்கு கொடுக்க மறுத்ததை தொடர்ந்தே சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் கிளிநொச்சி பொலிஸாரினால் கிளிநொச்சியில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு குடும்ப பெண்ணும் கணவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
![]()