கவிதைகள்

காதலி… என்னைக் காதலி… கவிதை… மெல்போர்ன் அறவேந்தன்

என் கனவில் வந்துயெனைக் கட்டியணைக்கும் நீ
நனவில் மறுப்பதேனோ?

உன்பார்வை செய்தவினை இப்பாவி மனதைப்பெரும்
பாடு படுத்தலாமோ?

என் உணவில் ஊறுஞ்சுவை, செவியில் சேருமிசை
காணுங் காட்சி நீயோ?

உன் மனதின் கருத்தறிய வழியுங்கிடைக்க வில்லையிதுவும்
விதியின் சதியோ?

என் வசந்தம் நீ! உந்தன் மலர்ந்தமுகம் திருப்பக்
காலம் கடத்தலாமோ?

உன் இசைந்த முடிவுபெற இந்த ஜென்மம் முழுதும் நான்
காத்து இருக்கலாமோ?

– மெல்போர்ன் அறவேந்தன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *