கவிதைகள்
வாழ்க வள்ளுவம் (சிந்தியல் வெண்பா)…. கவிதை … மெல்போர்ன் அறவேந்தன்

வள்ளுவன் போற்றுதும்! வள்ளுவன் போற்றுதும்!
வாய்த்தசீர் வானோர் வரிசைக்கும் மேலாய்வந்
தள்ளிக் குறள்தந்த தால்.
வள்ளுவம் போற்றுதும்! வள்ளுவம் போற்றுதும்!
தெள்ளுதமிழ்த் தேனாலுய் யும்வழி நல்லுலகில்
உள்ளோர்க்குத் தான்தந்த தால்.
செந்தமிழ்ப் போற்றுதும்! செந்தமிழ்ப் போற்றுதும்!
முந்திப் பிறந்துவந்து போற்றும் பொதுமறையை
வந்துப் பிறர்க்களித்த தால்.
![]()