முச்சந்தி

பாரியளவில் ஊழல் மோசடிகள் முன்னாள் அமைச்சர்கள் ஐவர் மீது விசாரணை!

பாரியளவிலான ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேருக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்தி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை தூரிதப்படுத்தி அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த காலங்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீக்கிக்கொள்ளப்பட்ட பல்வேறு அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிப்பதற்கு சட்டப் பிரிவினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button