கவிதைகள்

தன்னம்பிக்கை… கவிதை …. கலை

வாழ்க்கை எனக்கு
வண்ணமலர் சோலையில்லை!
நான்
செல்கின்ற பாதை
கற்களும் முட்களும்
நிறைந்த
ஒற்றைவழிப்பாதை!

சென்றிடும் பாதையில்
கண்டதெல்லாம்….
தோல்விகளும்
துரோகங்களுமே!

ஆனாலும்,
அத்தனை துயரத்திலும்
அழுது,
அடம்பிடித்து எழுந்து ….
அன்னையாய்
தோழியாய்
அரவைணத்து,
அகமகிழ்ந்து
புதையுண்டு போகாமல்
தலைநிமிர்ந்து
நான் வாழ
கற்றுத்தந்தது
தன்னம்பிக்கை!!

எத்தனை ஆயிரம்
துயர்வரினும்..
சூரியனைக்கண்ட
பனிபோல
ஓடிவிடும்
தன்னம்பிக்கை
துணையிருந்தால்!!

தன்னம்பிக்கையோடு
நடவுங்கள்.
நாளைய விடியல்
நம்கையில்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *