கவிதைகள்
இடைவெளி தேவை…. கவிதை… சசிகலா

சிறிதென்னும் மற்றவர்களின்
எண்ணவோட்டங்களிடமிருந்து
விலகிட நினைக்கிறேன்…
சிறிது இடைவெளி
வேண்டும் மனதிற்கு ..
பயத்தை விட்டொழிக்க
கோபத்தை களைந்து
கலக்கங்களை நீக்கி
துக்கங்களில் மூழ்கி
தனிமையில் ஓவென்று கதற..
கொஞ்சம் இடைவெளி
வேண்டும் தான்..
மனதோ மெல்லிய
சிறகுகளாக மாறகிறதோ இல்லையோ…
என் அழுகை கண்ணீர்
என் விழிகளுக்கு மருந்தாக
மனதிற்குள் நிழல் நிஜமாக எதிரே
நிற்க… நான் என் உலகத்திற்குள்
சிறை வாசம் செய்ய ஆசை…
அதற்காகவே சிறிது
இடைவெளி தேவை தான்
எனக்கு …
![]()