வடமராட்சியில் தாக்குதல் ஒன்றை நடத்தத் தயாரான குழு கூரிய ஆயுதங்களுடன் சிக்கியது
பருத்தித்துறை பகுதியில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்காக தயாரான குழு ஒன்று வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூரிய ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பான இருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் பா.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
பருத்தித்துறை வெளிச்ச வீட்டடிப் பகுதியில் வீதியால் சென்ற பெண்கள் யுவதிகளை அச்சுறுத்தும் விதமாக கோஷ்டி ஒன்று ஈடுபட்டிருந்தது.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிசார் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை வைத்திருந்த இருவரை கைது செய்து அவர்களுக்கு எதிராக ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் வீதியால் சென்ற பெண்கள், யுவதிகள், சிறுவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
![]()