கவிதைகள்
கிளி ஒருநாள் பேசும்…. கவிதை … முல்லைஅமுதன்

காலை வயல்காட்டிற்கு போய்வந்த
பூனை கிளி ஒன்றை வாயில் கவ்வியபடி
வாசலில் போட்டது.
வலியும்,பீதியும்
கிளியின் தென்படுவதாக பேர்த்தி சொன்னாள்.
அவளுக்குப் புரிந்த செய்தி எனக்கு இன்னமும் பிடிபடவில்லை.
கிளி ஒருநாள் பேசும்.
பாடும்…என்றபடி தூக்கிக் கொண்டாடினாள்.
நாட்களாயின.
கிளி வாய் திறந்து முதலில் பேசியது…
மொழிபெயர்க்க முடியவில்லை..
‘அக்கா!உனக்கு அன்பு முத்தங்கள்’
அவள் மொழிபெயர்க்கிறாள் தன் செவ்விதழ் பிரித்து..
முல்லைஅமுதன்
![]()