உக்ரைனில் ஒரே நாளில் 280 வீரர்கள் பலி

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022-ம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை பின்னர் உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அதில் பலன் ஏற்படவில்லை.போரில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் அரசு கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இதேபோன்று வடகொரியா நாடு, ரஷியாவுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியொன்றில், உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் ஆயுத படையை சேர்ந்த 280 பேர் 24 மணிநேரத்தில் உயிரிழந்து உள்ளனர். பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 3 கார்கள், மின்னணு போர் நிலையம் மற்றும் 2 பீரங்கி ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

ஒட்டுமொத்தத்தில், குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் நாடு 37,935 வீரர்கள் மற்றும் 229 பீரங்கிகளை இழந்துள்ளது என்றும் அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *