மருக்கள் அதிகமா இருக்கா?; சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்

உடலில் இருக்கும் மருக்கள் அதாவது அக்ரோகார்டன் (ஸ்கின் டேக்) என்று அழைக்கப்படுகிறது.

இது உடலில் கழுத்து, அக்குள், தொடை, கண், இமை, மார்பு, இடுப்பு, முதுகு ஆகிய இடங்களில் அதிகம் ஏற்படக்கூடும்.

எதுவித தீங்கும் இழைக்காத இந்த சதை வளர்ச்சி தோலின் மேற்பரப்புடன் ஒரு சிறிய தண்டு மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

இத் தோல் மருக்களுக்குள் நரம்பு செல்கள், நார்ச்சத்து, கொலாஜன், கொழுப்பு செல்கள், சிறிய இரத்த நாளங்கள் ஆகியவை உள்ளன.

மருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தோல் மருக்கள் அதிகம் இருக்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் பிரச்சினைகளில் இரண்டாவது இடத்தில் மருக்கள் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button