இலங்கை

கருணாவின் போலி இராஜதந்திர கடவுச்சீட்டு விவகாரம்: மேலும் சிக்கலில் சுரேஷ் சலே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி இராஜதந்திர கடவுச்சீட்டு விவகாரத்தில், தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே மற்றும் அன்சாப் ஆகிய இருவருமே கருணாவிற்கு போலியான இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்து கொடுத்தவர்கள் என கொழும்பு கோட்டே நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி இராஜதந்திர கடவுச்சீட்டு

மேலதிக சொலிசுட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் இந்த விடயத்தை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில் போலி இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி இங்கிலாந்திற்குள் பிரவேசித்த போது கருணா, அந்நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோகில குணவர்தன என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலி இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி கருணா இங்கிலாந்திற்குள் பிரவேசித்திருந்தார்.

சுரேஷ் சலே மற்றும் அன்சாப் ஆகியோரே கருணாவிற்கு போலி கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தவர்கள் என திலிப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டே நீதவான் பசான் அமரசிங்க முன்னிலையில் திலிப பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலே மறுப்பு

போலி கடவுச்சீட்டு மூலம் இங்கிலாந்திற்கு கருணாவை அனுப்பிவைத்ததன் பின்னர், கருணாவை பார்ப்பதற்காக சுரேஷ் சலேவும் இங்கிலாந்து சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சுரேஷ் சலே இக்கருத்துக்களை மறுப்பதோடு, கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுக்கவில்லை என்ற நிலைப்பாட்டையே எடுக்கிறார்.

சுரேஷ் சலேயைச் சந்தித்த இரண்டு நாட்களின் பின்னரே இங்கிலாந்து பொலிஸார் கருணா அம்மானைக் கைது செய்தனர். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

கருணாவின் போலி இராஜதந்திர கடவுச்சீட்டு விவகாரம்: மேலும் சிக்கலில் சுரேஷ் சலே | Suresh Salay Made Fake Passport For Karuna

அந்த இராஜதந்திர கடவுச்சீட்டு போலியானது என்றும், அது சட்டவிரோதமான கடவுச்சீட்டு என்றும் அங்கிருந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந்த கடவுச்சீட்டை சுரேஷ் சலே மற்றும் தற்போது வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள அன்சாஃப் ஆகியோரே பெற்றுத் தந்ததாகக் கருணா அம்மான் கூறுகிறார்.ஆனால் அவர்கள் அதை மறுக்கிறார்கள் என திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான ஆவணங்களின் விபரங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன. ‘கோகில துஷ்மந்த குணவர்தன’ என்ற நபர் அரசாங்க சேவையில் கூட இருந்ததில்லை; அப்படி ஒரு மனிதரைக் கூடக் கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறான ஒன்றை அவர்கள் எவ்வாறு உருவாக்கினார்கள்? தற்போதைய நிலவரப்படி, சுரேஷ் சலே என்பவர் கடவுச்சீட்டு தயாரிப்பதில் வல்லவர் போலத் தெரிகிறது. அவரிடமும் இரண்டு மூன்று கடவுச்சீட்டுகள் இருந்துள்ளன” என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மேலும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *