அதானியின் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு கடன் உதவி; மீள ஆராய்கின்றது அமெரிக்க நிறுவனம்

இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடனான துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்த அமெரிக்க நிறுவனம் கௌதம் அதானி உட்பட அதானி குழுமத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் என்ற அமைப்பு இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு கடன்வழங்குவது குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார்.

கடன் வழங்குவதற்கு முன்னர் திட்டத்தின் அனைத்து அம்சங்களும் எங்களின் கடுமையான தராதரங்களை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்தும் ஆராய்ந்துவருகின்றோம்,என தெரிவித்துள்ள அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரியொருவர் இந்த திட்டத்திற்கான நிதிகடன் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கவி;ல்லை இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் அதானி குழுமமும் இலங்கையின் தலைநகரில் முன்னெடுத்துள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு உதவப்போவதாக அறிவித்திருந்தது.

ஆசியாவில் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக இது கருதப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button