திடீரென ரஜினிகாந்தை சந்தித்த சீமான்; என்ன காரணம்?

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்த புகைப்படத்தை சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அண்ணன் சீமான்!” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலானது மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான சந்திப்பு சுமார் 1 மணிநேரம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவரும், தமிழக அரசியல் சூழ்நிலை, விஜயின் அரசியல் பயணம், 2026 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகிறார் என்று தகவல் வந்தபோது நாம் தமிழர் கட்சி சீமான் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில், போலி என்கவுண்டர் குறித்து பேசியிருந்ததை சீமான் பாராட்டினார். இதன் பின்னர் சீமானை செல்போனின் தொடர்பு கொண்ட ரஜினி, நன்றி தெரிவித்து நேரில் பேச விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button