விருப்பு வாக்கு சண்டையால் மீண்டும் எண்ணப்பட்ட சிலிண்டர் வாக்குகள்

களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் விருப்பு வாக்கு தொடர்பில் பிரபல அரசியல்வாதிகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையால் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அந்த வாக்குகளை மீண்டும் எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு ஆசனம் கிடைத்த நிலையில் அந்த ஆசனத்திற்காக அந்தக் கட்சியின் விருப்பு வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட போது மீண்டும் அதனை எண்ணுமாறு பிரபல வேட்பாளர் ஒருவரால் கேட்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் வேட்பாளரான ராஜித சேனாரட்ன மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் விருப்பு வாக்குகள் தொடர்பிலேயே முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இருவரின் ஆதரவாளர்களும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகில் கூடியிருந்துள்ளனர். இதன்போது அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மீண்டும் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதுடன், ரோஹித அபேகுணவர்தன வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *