வசந்த முதலிகே, உள்ளிட்ட 18 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்துவதற்கு சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்

கடந்த போராட்டத்தின் போது அவர்கள் சட்டவிரோத கூட்டமாக செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தார்

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்

இதேவேளை சம்பந்தப்பட்ட மனுவை பிப்ரவரி 10ம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button