காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி புதிய எச்சரிக்கை!

நவம்பர் 1-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சீக்கிய இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டைக்குடியுரிமை வைத்துள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் நிறுவனரான பன்னுன் கடந்த ஆண்டும் இதே நேரத்தில் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை முன்னதாக கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் வந்திருந்தன

சீக்கியர்களுக்கு தனி இறையாண்மை கொண்ட நாடு வேண்டும் என்று கோரி வரும் எஸ்எஃப்ஜெ என்ற அமைப்பை வழிநடத்தி வரும் குர்பத்வந்த் பன்னுன், தேசதுரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button