முன்னாள் அமைச்சர்களுக்கான அவசர எச்சரிக்கை: உத்தியோகப்பூர்வ இல்லங்களை விரைவில் கையளிக்குமாறு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் உத்தியோகப்பூர்வ இல்லங்களை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.

தற்போது 14 வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ள நிலையில் கையளிக்கத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *