30 வயதுக்கு உட்பட்ட 2 இலட்சம் இளைஞர்களுக்கு தொழில் இல்லை: ஆய்வில் தகவல்

இலங்கைத்தீவில் 15-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுள் 2,63,274 பேர் தொழில் அற்றவர்களாக உள்ளதாக சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

அவர்களுள், 18-24 வயதுக்கு இடைப்பட்ட 1,52,606 பேர் உள்ளடங்குவதாகவும் 25-29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 1,10,668 பேர் உள்ளடங்குவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

இலங்கைத்தீவில் வேலையற்றவர்களுள் 1,84,406 பேர் க.பொ.த. உயர்தரம் அல்லது அதனை விட அதிக தகைமைகள் உடையவர்கள் ஆவர்.

க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த 1,02,234 பேர் உள்ளடங்கும் நிலையில் சித்தியடையாதவர்கள் 86,822 பேர் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, வேலையின்மை பெண்களிடையே அதிகமாக காணப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

பெண் தொழிலாளர் பங்கேற்புகள் குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளன.

இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் பிரதான சிக்கலாக மாறியுள்ள தொழிலின்மையை குறைப்பதற்காக அரசாங்கம் செயற்பட வேண்டும் என அவர் தெரவித்தார்.

அதிக கல்வியறிவுள்ளவர்களிடையே காணப்படும் தொழிலின்மையை குறைக்கும் நோக்கில் புதிய அரசாங்கம் மூலம் அவசியமான கொள்கைகளை முன்வைக்க வேண்டும் என பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையெனில், இளைஞர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கப்படும் பங்களிப்பு கிடைக்காத அதேவேளை, நாட்டில் உள்ள அறிவுள்ள திறமையான இளைஞர்களை சமூகத்திற்கு பிரயோசனமானவர்களாக உருவாக்க வாய்ப்புகள் கிடைக்காது எனவும் விளக்கமளித்தார்.

இதன்மூலம், சமுதாயத்திற்கான இழப்பு அளப்பரியது எனவும் பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button