முச்சந்தி

யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் !

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் நீர்வேலிப்பகுதியில் மதுபானசாலை ஒன்றினை தொடர்ந்து திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றவரும் நிலையில் அதனை உடனே நிறுத்துமாறு கோரி கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (4) மாலை இந்த ஆர்ப்பாட்டம் எடுக்கப்பட்டது.

குறித்த விடயம் அடங்கிய மகஜர் ஒன்றிணையும் கோப்பாய் பிரதேச உதவி பிரதேச செயலர் சஞ்சீவன் ராதிகாவிடம் பொதுமக்கள் கையளித்தனர்.

நீர்வேலி பகுதியில் அத்தியார் இந்துக்கல்லூரி, கந்த சுவாமி கோவில் என்பவற்றிற்கு அருகிலே குறித்த மதுபான சாலை திறக்கப்படவுள்ளதால் பாடசாலை மாணவர்கள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த கோரியும் பிரதேசவாதிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button