முச்சந்தி

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு; தேசிய மக்கள் சக்தி விடுத்துள்ள முக்கியு அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியானது, நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான தமது வேட்புமனுப் பட்டியலை மாவட்ட ரீதியில் இறுதி செய்து வருகிறது.

வேட்பாளர்கள் இடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையையும் தயார் செய்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்கள் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி எந்த வகையிலும் தலையிடாது.

ஆனால், விருப்பு வாக்குகள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதை கட்சி உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையை உருவாக்கி வருவதோடு, போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.

ஏனைய கட்சிகளைப் போல் அல்லாது, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நியமனப் பட்டியல் மாவட்ட ரீதியில் தயாரிக்கப்பட்டு வருவதோடு இறுதி செய்யப்பட்ட பட்டியல்கள் கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தனது நியமனப் பட்டியலிலும் தேசிய பட்டியலிலும் அதிகமான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கும். அத்துடன் தொழில் வல்லுனர்களும் அதற்குள் அடங்குவர்.

அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கான ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. அத்தகைய நபர்கள் மாவட்ட அளவில் நியமன வாரியங்களை கலந்தாலோசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button