முச்சந்தி

மைத்திரி வீட்டின் முன் பெண் ரகளை

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் வெள்ளைநிற காரொன்றில் வந்திறங்கிய பெண்ணொருவர் கத்திகூச்சலிட்டு முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்ட பின்னர் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவரை கைதுசெய்வதற்காக தீவிர விசாரணைகளை கறுவாத்தோட்டப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்படி சம்பவம் குறித்து முறைப்பாடளித்துள்ளதாக குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பெண் வந்திறங்கிய வெள்ளைநிற காரின் இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பெண் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரரும் வர்த்தகருமான டட்லி சிறிசேனவை குறிப்பிட்டே கடும் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் வந்திறங்கிய காரின் இலக்கத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button