வீட்டுக்குள் நுழைய முயன்ற 3 முகமூடி கொள்ளையர்கள்; ஒற்றை ஆளாய் விரட்டிய பெண்

இந்தியா, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் எனும் இடத்தைச் சேர்ந்தவர் மந்தீப் கவுர் எனும் பெண்.

இவரது கணவர் தங்க நகை கடையொன்றை நடத்தி வருகிறார்.

இவ்வாறிருக்க கடந்த திங்கட்கிழமையன்று குறித்த பெண் அவரது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

அச் சமயத்தில் மூன்று முகமூடிக் கொள்ளையர்கள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பதை கவனித்த அப் பெண் வேகமாக ஓடிச் சென்று கதவைப் பூட்டுவதற்கு முயற்சி செய்தார்.

எதிர்ப் பக்கத்திலிருந்து மூன்று கொள்ளையர்களும் கதவைத் தள்ளி வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.

தன்னால் இயன்றளவு முழு பலத்தையும் செலுத்தி கதவைப் பூட்டி அருகிலிருந்த சோஃபாவை இழுத்து கதவை திறக்க முடியாதவாறு இறுக்கி வைத்தார்.

அப் பெண் உதவி கேட்டு கத்த ஆரம்பித்ததும் அக் கொள்ளையர்கள் பயத்தில் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

இக் காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் பதட்டமடையாமல் நிலைமையை சமயோசிதமாக கையாள வேண்டும் என்பதற்கு இப் பெண் சிறந்த உதாரணம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button