விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.

திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலேயே இந்தக் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள குறித்த கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர் உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

   

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button