மைத்துனரிடம் அடிவாங்கியவர் கூரையில் ஏறி உண்ணாவிரதம்

ஹொரண பகுதியில் மைத்துனர் தாக்கப்பட்டதாகக் கூறி, அவரைக் கைது செய்யக் கோரி ஒருவர் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் ஹொரண – பள்ளியகந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் தனது மைத்துனருடன் அடிக்கடி சண்டையிட்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் நேற்று (01) மதியம் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதன்போது மது அருந்தியிருந்த குறித்த நபர், தனது மைத்துனரே தாக்கியதாகக் கூறி, கலெதடுகொட பிரதேசத்தில் உள்ள சமகி ஜன பலவேகய கட்சி அலுவலகத்தின் கூரையில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பொலிஸார் அந்த இடத்திற்குச் சென்றபோது அவர் ஏற்கனவே சென்றுவிட்டமை தெரியவந்துள்ளது.

தாடர்ந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button