ரணில் விலகி கட்சியை எம்மிடம் ஒப்படையுங்கள்

பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டு தம்முடனான தேர்தல் கூட்டணிக்கான முக்கிய நிபந்தனையாக ரணில் விக்ரமசிங்க ஐ.தே.க.வின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை விட ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க விரும்பும் ஒரு சிலர் சிறிகொத்தாவில் ஒரு சில கட்சி உறுப்பினர்களுடன் இருக்கட்டும், மற்றவர்கள் எங்களுடன் சேர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இப்போது சிறந்த இடம் ஐக்கிய மக்கள் சக்தியாகும். அத்துடன், தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி கட்சியை எங்களிடம் ஒப்படைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவிடம், தலைமைப் பதவியை இராஜினாமா செய்யுமாறு பலமுறை கூறியும் அவர் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடிமட்ட மட்டத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவைத் தலைமைப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று தீர்மானங்களைப் பெறுவதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இது வார இறுதியில் காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.

இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது எதிரணிக் கூட்டணியை உருவாக்குவதே சிறந்த வழி என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் பொதுச் சக்தியாகப் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்போம். பொது எதிரணிக் கூட்டமைப்பை உருவாக்குவதே நாட்டைப் பொறுத்த மட்டில் சிறந்த தெரிவாகும், நாங்கள் அதைத் தொடர்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு தசாப்தங்களில் முதன்முறையாக பிரதான எதிர்க்கட்சி அதிகாரத்தைப் பெறத் தவறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் பொதுக் கூட்டணி அமைப்பதே இப்போது இருக்கும் சிறந்த வழி. இந்த இலக்கை அடைய முடியுமா என்பதைப் பார்த்துவிட்டு, பொதுத் தேர்தலில் எப்படிப் போட்டியிடப் போகிறோம் என்பதைத் தெரிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button