சீன அங்காடியில் கத்திக் குத்து தாக்குதல்: மூவர் பலி 15 பேர் காயம்

சீனா, ஷங்காய் நகரில் அமைந்துள்ள அங்காடி (Super market) ஒன்றில்  ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லின் என்ற குடும்பப் பெயரைக் கொண்ட 37 வயதுடைய நபரே இச் சம்பவத்தை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் தனிப்பட்ட நிதி சுமையால் பாதிக்கப்பட்டு ஷாங்காய் நகரத்துக்கு வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button