தாய்லாந்து திடீரென தீப்பிடித்த பஸ்: 25 பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து வடக்கே உத்தை தனி மாகாணத்திலிருந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 25 மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த 16 மாணவர்களும் ஆசிரியர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி சுற்றுலாவுக்காக 44 பேருடன் பஸ் புறப்பட்ட நிலையில் கு கோட் நகரில் ஜீர் ரங்சித் என்ற பகுதியருகே பஹோன் யோதின் சாலையில் பயணித்த போது பஸ் திடீரென தீப்பிடித்துள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button