இலங்கை மீது எச்சரிக்கை விடுக்கின்றதா இந்தியா?: சீனாவுக்கு முன்னுரிமை

இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் தமது திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் முன்னர், விசேடமாக புதிய அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் என்னவென்பது தொடர்பில் அறிய முன்னர், இந்தியாவிலிருந்து தென்னிலங்கை மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பில் இந்திய அரசாங்கம் குழம்பியுள்ளமை தான் இந்தியாவின் உண்மை நிலை என இலங்கையின் முதற்தர ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்த செய்தியும் அதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுவதாக குறித்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.

விசேடமாக புதிய அரசாங்கம் ஆசிய பொருளாதாரத்தின் முன்னோடியான சீனா மீது ஈர்ப்பாக உள்ளமையை நிறுத்த இவ்வாறு விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றதாக குறித்த செய்தி எடுத்துக் காட்டுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button