ஓடிக் கொண்டிருந்த பஸ்சின் பின்புற சக்கரங்கள் ஒரேநேரத்தில் கழன்றன

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று நேற்று முன்தினம் மாலை (28) வெளிமடை – பொரலந்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டு ஒரேநேரத்தில் கழன்று விலகிச் சென்றுள்ளன.

இதனால் பேருந்து பாரிய விபத்தில் சிக்கவிருந்த நிலையில், சாரதி உரிய நேரத்தில் பேருந்தை தரித்து நிறுத்தியதால் விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.

பேருந்தில் 20 பயணிகள் வரை இருந்த நிலையில், சமயோசிதமாக செயற்பட்டு பேருந்தை நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதியை பயணிகள் பாராட்டியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button