இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்: இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹெஸ்பொல்ல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருவதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹெஸ்பொல்ல அமைப்பு இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலன் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு ஒலி ஒலிக்கப்படும் போது, ​​இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button