லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 182 பேர் பலி – 400 இற்கும் மேற்பட்டோர் காயம்

லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 182 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 300 இடங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது மேலும் 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகலெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி அனுமதி வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹெர்சி ஹலேவி மற்றும் பிற இஸ்ரேல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button