சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி; விரைந்து காப்பாற்றிய குரங்குகள்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் இருந்து குரங்குகள் குழு ஒன்று காப்பாற்றியுள்ள அரிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று குறித்த சிறுமியை, கைவிடப்பட்ட ஒரு வீட்டிற்கு அழைத்துவந்த சந்தேக நபர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்த முயற்சித்துள்ளனர்.

இதன்போது, அந்த பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த குரங்குகள் அந்த சிறுமியை துஷ்பிரயோக சம்பவத்தில் இருந்து காப்பாற்றியுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் தொடர்பில் தனது பெற்றோரிடம் விபரிக்கவே, சிறுமியின் பெற்றோர் துரிதமாக செயற்பட்டு பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை சந்தேக நபர் அழைத்துச்சென்றதாகவும் பின்னர் குரங்குகள் காப்பாற்றியதையடுத்து தப்பித்து வந்ததாகவும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

குரங்குகள் தன் மகளை காப்பாற்றியிருக்காவிட்டால் இந்நேரம் அவள் உயிரிழந்திருக்க நேரிட்டு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் புகார் பதிவு செய்துள்ளதாகவும் விரைவில் சந்தேக நபரை கைது செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button