காரமான உணவுகள்…: என்னென்ன பிரச்சினைகளுக்கு காரணமாகும்?
உணவில் காரம் சற்று அதிகமாக இருந்தால்தான் சாப்பிட சுவையாக இருக்கும் என்பதே பலரது கருத்து.
அதற்காக பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகு என மிகவும் காரமான சுவையூட்டிகளை உணவில் சேர்த்துக் கொள்வோம்.
ஆனால், இனிப்போ, புளிப்போ, உறைப்போ எதையும் அளவாக சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது.
மிளகாய், மிளகு போன்றவற்றில் கேப்சைசின் எனப்படும் ஒருவித கலவை உள்ளது. இதுதான் காரத்துக்கு காரணமானது.
இக் கேப்சைசின் நாக்கிலுள்ள சுவையரும்புகளை தூண்டி, எரிச்சலை ஏற்படுத்தும். இதுவே நாம் ருசிக்கும் காரம்.

காரமான உணவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள்.
இரைப்பை அழற்சி
இரைப்பை அழற்சி, வயிற்றில் புண் உள்ளவர்கள் அதிக காரமான உணவுகளை உண்ணக்கூடாது.
எடை அதிகரிப்பு
பெரும்பாலும் காரமான உணவுகள் இறைச்சியை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் அமைகிறது. அதிகமாக இறைச்சி சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது.
வயிற்றுப்போக்கு
இரைப்பைக்குள் காரமான உணவுகள் சென்றவுடன் அது விரைவில் ஜீரணமாகும். இதனால் வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
தலைவலி
காரமான உணவுகளை உண்பதன் மூலம் தலைவலி ஏற்படும் அபாயமும் அதிகம்.

![]()