தந்தையைக் காக்க கரடி மீது துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன் கைது!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தையைக் கடித்த கருங்கடியை சுட்டுக் கொன்றமைக்கான வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஸ்கான்சின் வன விலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர் 6 அன்று பர்னெட் கவுண்டியில் உள்ள சைரன் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிறுவனின் 43 வயதுடைய தந்த‍ை மீது குறித்த கரடி தாக்குதல் நடத்திய போதே, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.

கரடி தாக்குதலில் காயமடைந்த நபரின் கன்னத்தில் 23 மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவரது வலது கையில் ஏழு துளையிடல் காயங்கள் மற்றும் ஒரு வெட்டுக் காயம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button