எதிர்மறை சக்தியை விரட்டியடிக்கும் வெற்றிலை: இப்படி செய்து பாருங்கள்

மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை தனியிடம் வகிக்கின்றது. அந்தளவுக்கு வெற்றிலை அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வைத் தரும்.

வீட்டில் பணப் பிரச்சினை, அல்லது உடல் நலக்குறைவு என எது ஏற்பட்டாலும் அதனை எளிமையாக தீர்ப்பதற்கு வெற்றிலை மிகவும் உதவும்.

வெற்றிலையை வாங்கி நன்றாகக் கழுவி அதனை வீட்டு வாசலில் தொங்கவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் எதிர்மறை சக்திகள் வெளியேறும்.

ஆனால், அந்த வெற்றிலை காய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்வது போல் இருந்தால் உடனே அதை எடுத்துவிட்டு புது வெற்றிலையை தொங்கவிட வேண்டும்.

வெற்றிலையை ஒரு தாம்பூல தட்டில் வைத்து அதன் மீது கற்பூரத்தையும் வைத்து அதில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயையும் விட்டு அதனை அப்படியே பூஜையறையில் வைத்து கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

அப்படி விளக்கேற்றி வேண்டிக் கொண்டால் நமது பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.

அதேபோல் வெற்றிலையில் மிளகு மூன்றை மடித்து நூல் போல கட்டி பூஜையறையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்து நீங்கள் வணங்கும் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு மூன்று நாட்கள் வழிபட்டு அந்தப் பொட்டலத்தை அப்படியே ஓடும் நீரில் போட்டுவிட வேண்டும்.

இவ்வாறு செய்தால் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button