இந்தப் பறவைகளின் படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள்: அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்

வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க சில விடயங்களை செய்வோம். அந்த வகையில் சில பறவைகளின் படங்களை வீட்டில் மாட்டி வைக்கும்போது அது நமக்கு பல நன்மைகளைப் பெற்றுதரும்.

கிளி

வீடுகளில் கிளி வளர்ப்பது ராகு, கேது மற்றும் சனியின் தாக்கத்திலிருந்து விடுபட உதவும். நோய்கள் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். எனவே கிளி வளர்க்காவிட்டால் கிளியின் படங்களை வீட்டில் மாட்டி வைக்கலாம்.

இப் படங்களை வடக்கு திசையில் மாட்டி வைத்தால் சிறப்பு.

மயில்

மயிலிறகு மிகவும் மகத்துவமானதாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் நடமாட்டம் இருக்கும் இடங்களில் மயில்கள் இருக்காது. ஆனால், அதையும் மீறி மயில்கள் வீட்டுக்குள் வருவது அபூர்வமானதாக பார்க்கப்படுகிறது.

எனவே தெற்கு திசையில் மயில் தோகையின் படங்களை வைக்கலாம்.

அன்னப்பறவை

அன்னப்பறவையின் படங்களை வீட்டில் வைத்திருப்பது அதிக நன்மைகளைக் கொடுக்கும். இது வீட்டுக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு பண வரவையும் அதிகப்படுத்தும். இப் படங்களை தென்கிழக்கு திசையில் மாட்ட வேண்டும்.

சிட்டுக்குருவிகள்

வாஸ்து, தோஷங்களை நீக்கி, எதிர்மறை ஆற்றலை விரட்டுகிறது. எனவே வீட்டின் கிழக்கு திசையில் சிட்டுக்குருவிகளின் படங்களை மாட்டி வைக்கவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button