தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம்: யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் பகிரங்க அழைப்பு

தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம்: யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் பகிரங்க அழைப்பு

தமிழ்ப் பொது வேட்பாளர் எண்ணக்கருவினை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினர் தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்கள்,

தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் நாங்கள் சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ் அரசியற்கட்சிகளையும் உதிரிகளாக்கி எங்களின் கூட்டு – மனவலுவைத் தகர்த்தெறிவதில் சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாக செய்து முடித்துள்ளன.

பொருளாதார நல்லிணக்க மாயைகள் சூழ்ந்த இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தரப்புக்கள் எத்த உத்தரவாதங்களோ வாக்குறுதிகளோ இன்றி சிங்கள வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை அடகு வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனை பல்கலைக்கழகச் சமூகத்தினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயெரு வழியென்றும், 13ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தினுள்ளும், ஏக்கிய ராச்சிய அரசியலமைப்பினுள்ளும் தமிழ் மக்களின் அரசியலை சுருக்குவதில் சிங்கள தலைமைகளிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள் முயன்று வருவதையும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த செயற்பாடுகளினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button