தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்: சிறீதரன் பகிரங்கக் கோரிக்கை

தமிழர்கள் திரட்சியாகத் தமிழ்ப் பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்பாேதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய விசேட குழுக் கூட்டத்திலும் மத்திய குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்தப் பாேவதாக தெரிவித்தார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளேன்.

சிங்கள தேசிய வேட்பாளர்கள் எவரினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் உரிமை, தன்னாட்சி தொடர்பில் எதுவும் இல்லை. இதனால் நான் அதனை ஏற்றுக்காெள்ளவில்லை.

தமிழர்கள் திரட்சியாக தங்களின் தேசத்தின் இருப்பையும், தங்களின் அடிப்படை அரசியல் உரிமைகளையும் நிலைநிறுத்துவதற்குத் தமிழ்ப் பாெது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button