டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் சீனாவுக்கு காத்திருக்கும் பேராபத்து: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியான மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் சீனாவிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உறுதியளித்த சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பை நடைமுறைப்படுத்தினால், சீனாவின் ஏற்றுமதி நின்றுவிடும். இதனையடுத்து அதிக திறன் காரணமாக, அதன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டுக்காக சீனாவை குற்றம் சாட்டிய டிரம்ப், சீன இறக்குமதிகள் மீது 60 முதல் 100 சதவீதம் வரை வரி விதிப்பதாக கூறினார்.

அவர் சீனாவை அமெரிக்காவின் “உண்மையான பிரச்சனை” என்று குறிப்பிட்டுள்ளார். சீனா அமெரிக்காவின் “பெரிய அச்சுறுத்தல்” என்றும் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அதிக அமெரிக்க வரி விதிப்பு சீனாவின் பொருளாதாரத்தை மெதுவாக்துவதுடன், பணவாட்டத்தின் ஆபத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகளாவிய முதலீட்டு வங்கி நிறுவனமான UBSஇன் படி, அதிக வரி விதிப்பு அடுத்த 12 மாதங்களில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2.5 சதவிகிதம் குறைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

2025 மற்றும் 2026 க்கு இடையில் வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாக குறையும் என்று UBS கணித்துள்ளது.

மற்ற நாடுகளும் சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா போன்று வரி விதித்தால் பிரச்சனை மேலும் மோசமாகும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button