ஆப்கானிஸ்தானில் 14 பேர் சுட்டுக்கொலை; தலிபான் அரசு கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்டு மாதம் 15ஆம் திகதி தலிபான்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போதில் இருந்து அங்கு குறிப்பிட்ட ஒரு பிரிவினரை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த பிரிவை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் இருந்து டைகுந்தி மாகாணத்துக்கு ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு இடத்தில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை கொண்டு அந்த வாகனத்தை சரமாரியாக சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button