நல்லூர் திருவிழா: வெகு விமர்சையாக இடம்பெற்ற சூர்யோற்சவம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது.

காலை 6.45 க்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து, தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.

சூரிய திருவிழாவான இன்று நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரிய பகவானின் அருள் காட்சியினை கண்டுகளித்தனர்.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

Oruvan

25 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின், கடைசி 15 நாள் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தற்போது புலம்பெயர் தேசங்களில் குடியேறியுள்ள தாயக உறவுகளும் இந்த உற்சவ காலத்தில் ஆலய தரிசனத்திற்காக வருகை தந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அதிகளவான வெளிநாட்டவர்களும் இந்த உற்சவ காலத்தில் ஆலயத்திற்கு சமய கலாசார ஆடைகளுடன் பிரவேசித்திருப்பதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

Oruvan

மேலும் உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆலயச் சூழலில் ட்ரோன் (Drone) கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button