பொதுவேட்பாளரை எதிர்க்கும் தமிழரசு கட்சி: நம்பிக்கை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்ப் பொது வேட்பாளரை முழுமையாக ஆதரிக்கும் என எதிர்பார்ப்பதாக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே கட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், பொது வேட்பாளர் என்ற விடயத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button