வான்கோவின் “ஸ்டர்ரி நைட்” ஓவியம்!
சுழலும் மேகங்கள் நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம். நட்சத்திர ஒளி பிரபஞ்ச பால் வெளியில் துடிதுடித்து மினு மினுக்கிறது. கரைசலாகி ஒழுகி நகர்கிறது.
உண்மையில் நட்சத்திரங்கள் எப்படி நகர்கிறதோ அப்படியே இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது!
இந்த உண்மையை 2004 இல் வானியல் தொலைநோக்கு கருவியை கொண்டு நட்சத்திரங்களை பார்த்தப் போது தான் தெரியவந்தது. அறிவியல் உலகம் அவரை நோக்கித் திரும்பியது !
நட்சத்திரங்களின் ஒளி பிரபஞ்ச வெளியில் உருகுவதை அவர் தன் மனக் கண்ணால் கண்டிருக்கிறார்.
அது மட்டும் அல்ல, நிறங்களில் ஒலி அலைகள். ஒலியில் நிறங்களின் வண்ணம் அவர் மணக்கண்ணில். மிகச்சிறந்த ஓவியக் கலைஞர்களுக்கு இது மாதிரியான மனநிலை உண்டு. இதை Chromesthesia என்று சொல்கிறோம்.
அவர் வாழ்ந்தக் காலத்தில் அவர் மனநிலை பிறழ்ந்தவராக கருதப்பட்டு அதற்காக மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார்!
பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தன் மனக்கண்ணில் காண்பவன் கலைஞன்.
அவன் உயிரோடு வாழும் போது இந்த உலகம் அவனை அவன் ரகசிய தரிசனங்களை .. புரிந்துக் கொள்வதில்லை.அவன் பித்துப் பிடித்தவனாக எப்போதும் தனித்து இருந்திருக்கிறான்.
![]()