பாகிஸ்தானின் இருவேறுப் பகுதிகளில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 37 பேர் பலி
பாகிஸ்தானின் இருவேறுப் பகுதிகளில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் நோக்கி பயணித்த பேருந்து, வேக கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்தனர்.
இதேவேளை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, குழந்தைகள், பெண்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()