கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள இந்திய போர்க்கப்பல் !

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ் மும்பை” எனும் போர்க்கப்பல் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இப்போர்க்கப்பல் கொழும்பில் தரித்துநிற்கும் காலப்பகுதியில் இந்திய – இலங்கை கடற்படையினருக்கு இடையிலான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில், இலங்கை கடற்படையினர் அக்கப்பலுக்கு சிநேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அதனைப் பார்வையிடுவர்.

அதேபோன்று இக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் அக்கப்பலின் கட்டளை அதிகாரி இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்கான தளபதி ரியர் அட்மிரல் டபிள்யு.டி.சி.யு.குமாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.

அதுமாத்திரமன்றி இக்கப்பல் விஜயத்தின்போது இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள், யோகாசனம், கடற்பரப்பு தூய்மையாக்கல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button