ஏடிஎம் இல் பணம் எடுக்கும்போது இந்தத் தப்பை பண்ணிடாதீங்க

நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார்கள்.

சில நேரங்களில் ஏடிஎம் அட்டைகள் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ அது பெரும் நிதி இழப்புக்கு வழிவகுக்கும்.

அந்த வகையில் ஏடிஎம் இல் பணம் பெற்றுக்கொள்ளும் பொழுது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பான இடங்கள்

மக்கள் கூட்டம் அதிகமுள்ள அல்லது வங்கி வளாகத்துக்குள் அமைந்துள்ள ஏடிஎம்களை தெரிவு செய்யுங்கள். இரவு நேரங்களில் அல்லது மறைவான இடங்களில் அமைந்திருக்கும் ஏடிஎம் இற்கு செல்வதைத் தவிர்க்கவும்.

பின் உள்ளீடு

உங்கள் Pin எண்ணை மற்றவர்கள் பார்ப்பதை தடுக்க, நீங்கள் உள்ளீடு செய்யும்பொழுது கையைக் கொண்டு கீபோர்டை மறைக்கவும்.

கவனியுங்கள்

நீங்கள் எண்ணை உள்ளீடு செய்யும்பொழுது உங்கள் அருகில் வந்து யாரேனும் கவனிக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள்.

பரிவர்த்தனை எச்சரிக்கை

வங்கிக் கணக்கில் பணம் எடுத்தால் அதனை குறுஞ்செய்திகள் மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்யவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button