பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் வியாதி இது

அதாவது நாம் மிகவும் நல்லவர்கள் என்று நாமே கற்பனை செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவது. இது மனிதனின் மிகப்பெரிய முட்டாள்த்தனம்.

பூனை கண்களை மூடிக்கொண்டாள் உலகம் இருண்டு விட்டது என்று எண்ணிக்கொள்ளுமாம். அதைப் போலத்தான் முக்கால் வாசி மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்று நம்மை விட பிறருக்குத்தான் அதிகம் தெரியும். நம் முதுகுக்கு பின்னாடி இருக்கும் அழுக்கு நமக்கு தெரியாது. நம் கண்களுக்கு தெரியாமல் எத்தனையோ மனிதர்கள் நம்மால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அந்த வலியும் வேதனையும் நமக்கு கடைசிவரை தெரியப்போவதில்லை.

பெரும்பாலான மனிதர்கள் நாம் நல்லவர்கள் என்ற மாய பிம்பத்தில் வாழ்கிறார்கள். நாம் நல்லவர்கள் என்ற கர்வம் பல முட்டாள்தனங்களை செய்ய வைக்கும்.

நாம் நம்மையே தவறாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button