இங்கிலாந்தில் வரம்பை மீறிய விந்தணு தானம்
இங்கிலாந்திலிருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் தானம் செய்யும் செயல்முறை சமீப காலமாக அதிகரித்துள்ளது.
அந்நாட்டு விதிகளின்படி, ஒருவரது விந்தணுவை 10 குடும்பங்களுக்கு மேல் கொடுக்க முடியாது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் எதுவித கட்டுப்பாடோ அல்லது வரம்போ இல்லை.
இதன் காரணமாக விந்தணு தானம் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் கார்டியன் (Guardian) எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இங்கிலாந்து கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் ஆகிய நாடுகளிலிருந்துதான் விந்தணு முட்டைகளை பெற்றுக்கொண்டது.
ஆனால், 2019 மற்றும் 2021க்கு இடையில், 7,542 ஸ்ட்ரோ விந்து (Straw sperm) இங்கிலாந்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கிரையோஸ் எனப்படும் மிகப்பெரிய விந்தணு மற்றும் முட்டை வங்கி, கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கு உடன்பிறப்புக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
![]()