முல்லை மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம்: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்லம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் யாழ். மாநர மேயர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button