கவிதைகள்

இப்போது புரிகிறது… கவிதை… கபன்னீர் செல்வம்

விரும்பவில்லை
என தெரிந்தும் பிடிவாதமாக
விரும்பிக் கொண்டேயிருக்கும்
இந்த மனதிற்கு
பைத்தியக்கார குணம்….
நடக்காதவொன்றை
கற்பனையாக மனதில்
நடத்திப் பார்த்து மகிழ்வது
மனம் சமாதானம் அடைய துடிக்கும்
பேரன்பின் விசனம் மேவிய நிலை….
நீ
வந்துப் போன சுவடுகளை
விருப்பத்தோடு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்…
ஒரு வெப்ப மழையில்
நனைந்துக் கொண்டிருக்கிறது நினைவுகள்…
நான்
நகராமல் நின்றுக் கொண்டிருக்கிறேன்…
என்னை
சுற்றிச் சுற்றி உன் நினைவுகள்
சூழ்ந்துக் கொண்டுள்ளது….
நீர் குமிழி
உடைவது போன்றே
உடைந்து கிடக்கிறது மனது…
அதில் நடந்தும் போகிறாய் நீ…..
நானில்லாமல்
உன்னால் இருக்க முடியுமென்று
உன்னுடைய சாமார்த்திய குணத்தை
முன்பே என்னிடம்
அடையாளம் காட்டவில்லை நீ….
மிக
எளிதாக பிரிந்து சென்றாய்
பிரமாண்டமாக
சிரித்துக் கொண்டுமிருக்கிறாய்…
உன்னை பாதிக்கவில்லை அன்பின் பிரிவு…
பிழை அன்பு
நான் புரிந்தேனில்லை… புரிகிறது….
பொருளில்லாதவர்களுக்கு
எவ்வுலகிலுமிடமில்லைதான்…
பன்னீர் செல்வம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *